Liberal இன் GST விடுமுறை இடைவேளைத் திட்டத்தை ஆதரிக்கும் அதே வேளையில், பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு தகுதி விரிவாக்கப்படும் வரை $250 தள்ளுபடியை ஆதரிக்க மாட்டேன் எனவும் NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார்.
Liberals இரண்டு மாதங்களுக்கு பொம்மைகள் மற்றும் உணவக உணவுகள் மீதான கூட்டாட்சி விற்பனை வரியை குறைக்க திட்டமிட்டுள்ளனர் மற்றும் வசந்த காலத்தில் 18.7 மில்லியன் கனேடியர்களுக்கு $250 வழங்க திட்டமிட்டுள்ளனர்.
Ottawa இல் நடந்த கனேடிய தொழிலாளர் காங்கிரஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய Singh, GST சட்டத்தை நிறைவேற்றத் தயாராக இருப்பதாகவும், ஆனால் முதியவர்கள், மாணவர்கள், ஊனமுற்றோர் நலனில் உள்ளவர்கள் மற்றும் கடந்த ஆண்டு வேலை செய்ய முடியாதவர்கள் ஆகியோரை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறினார். அத்தோடு கடந்த ஆண்டு $150,000 இற்கு கீழ் சம்பாதித்த எவருக்கும் தள்ளுபடி காசோலைகள் செல்லும் என்று தான் நினைத்ததால் இந்த யோசனையை முதலில் ஆதரித்ததாகவும் கூறினார்.
முன்மொழியப்பட்ட GST விடுமுறை, டிசம்பர் மத்தியில் தொடங்கி இரண்டு மாதங்கள் நீடிக்கும். மளிகைக் கடையில் தயாரிக்கப்பட்ட உணவுகள், மதுபானங்கள், குழந்தைகளுக்கான பொருட்கள், கிறிஸ்துமஸ் மரங்கள், உணவக உணவுகள், புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் மீதான GST நீக்கப்படும்.
GST விடுமுறைக்கான சட்டத்தை இயற்றுவதற்கான சிறப்புரிமை விவாதத்தை இடைநிறுத்த NDP ஒப்புக்கொண்டது, ஆனால் முன்மொழியப்பட்ட சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படாவிட்டால் Singh அதை ஆதரிக்க மாட்டார். மேலும் Bloc Québécois மூத்தவர்களுக்கும் ஓய்வு பெற்றவர்களுக்கும் சலுகைகளை வழங்க வேண்டும் என்று வாதிடுகிறது.