Newfoundland மற்றும் Labrador பகுதி கடற்கரையில் பாரிய அலைகள் தாக்கியதுடன், அப் பகுதி மக்கள் ஒரு சக்தி வாய்ந்த குளிர்கால புயலையும் அனுபவித்தனர். இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோருக்கு மின்சாரம் இல்லாமல் போனதுடன், மரங்கள் மற்றும் வீட்டின் பக்கவாட்டுகளை இடித்து, சிறிய கட்டிடங்களை கடலுக்குள் அனுப்பியது.
கடல் மட்டத் தீவின் 20-30 அடி உயரத்தில் உள்ள breakwater மீது அலைகள் மோதியதால், பாறைகள் நிலத்தில் அடித்துச் செல்லப்பட்டு, சாலைகளை மூடி, அருகிலுள்ள கட்டமைப்புகளுக்கு சேதம் ஏற்பட்டது. மேலும் கடந்த 14 ஆண்டுகளில் அனுபவித்திராத மிக உயர்ந்த surf இது என அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுச்சூழல் கனடா வானிலை ஆய்வாளர் Rob Carroll, பல பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100-120 km வேகத்திலும் மற்றும் Bonavista Peninsula இல் மணிக்கு 135 km வேகத்தில் வீசும் சக்தி வாய்ந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு அமைப்பைப் பதிவு செய்தார்.
கடற்கரையோரமுள்ள சிறிய கட்டிடங்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு அல்லது வெள்ளத்தில் மூழ்கியிருப்பதுடன், சில சாலைகள் வழியாக தண்ணீர் மேலே வருவதையும், பாறைகள் குறுக்கே தள்ளப்பட்டுள்ளதையும், கீழே விழுந்த மரங்கள், ஓடுகளையும் காணமுடிகின்றது. மேலும் சேதத்தின் அளவு அடுத்த 24 மணி நேரத்திற்குள் தெளிவாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8,000க்கும் மேற்பட்ட Newfoundland Power வாடிக்கையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி வரை இருளில் இருந்தனர்.
Newfoundland மற்றும் Labrador பகுதிகளிற்கு Environment Canada திங்கள் காலை வரை வானிலை எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. Western Newfoundland இல் 10 cm பனிப்பொழிவும், மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும், மற்றும் Port aux Basques இல் 15 cm வரை பனி மற்றும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு St. John’s பகுதிகளில் 20-40 mm வரை மழை பொழியக்கூடும் எனவும், eastern மற்றும் northeastern Newfoundland இல் 90 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்றும் சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.