கனடா செய்திகள்

Donald Trump கனடா 51வது மாநிலமாக மாற வேண்டும் என்பதில் தான் இன்னமும் தீவிரமாக இருப்பதாக கூறினார்

ஞாயிற்றுக்கிழமை நேர்காணல் ஒன்றில் கருத்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி Donald Trump கனடா 51வது மாநிலமாக மாற வேண்டும் என்பதில் தான் இன்னமும் தீவிரமாக இருப்பதாக கூறினார்.

அமெரிக்கா எதற்காக ஆண்டுக்கு $200 பில்லியன் கனடாவிற்கு செலுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பிய Trump தான் இதனை தொடர்ந்து அனுமதிக்கப்போவதில்லை என்றும்
கனடா 51வது மாநிலமாக இருப்பது மிகவும் நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வெள்ளிக்கிழமை வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கிடையிலான ஒரு மூடிய கதவு அமர்வின் போது பேசிய கனேடிய பிரதமர் Trudeau, கனடாவை 51வது அமெரிக்க மாநிலமாக மாற்றுவது குறித்து Trump பேசியது ஒரு உண்மையான விடயம் என்றும், அது எமது நாட்டின் இயற்கை வளங்களை அணுகுவதற்கான அவரது விருப்பத்துடன் தொடர்புடையது என்றும் கூறினார்.

Florida வில் நடைபெற்ற மற்றுமொரு நேர்காணலில் Trump, “நாட்டின் இரண்டு பெரிய வர்த்தக கூட்டாளிகள் மீது விதிக்கப்போவதாக அச்சுறுத்திய கட்டணங்களைத் தடுக்க கனடா மற்றும் மெக்சிக்கோ நாடுகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை” என்றும் கூறினார்.

New Orleans இல் நடைபெறும் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை Air Force One இல் பயணம் செய்த Trump, கனடா, மெக்சிக்கோ உள்ளடங்கலாக அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து steel மற்றும் aluminum இறக்குமதிகளுக்கும் 25% வரிகளை திங்கட்கிழமை அறிவிப்பதாகவும், வார இறுதியில் பரஸ்பர வரிகளுக்கான திட்டத்தை அறிவிப்பதாகவும் கூறினார்.

Related posts

அக்டோபர் 1 அன்று Ontario குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு மணி நேரத்திற்கு $17.20 ஆக உயர்த்தியது

admin

ஜேர்மனியுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் கனடா.

canadanews

February 01 முதல் கனடா இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் – Donald Trump

canadanews