வரி நிச்சயமற்ற தன்மை வீட்டு மீள் விற்பனையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. January 20 அன்று அமெரிக்க ஜனாதிபதி Donald Trump பதவியேற்பு கனடாவின் மிக முக்கியமான வர்த்தக உறவு குறித்த அச்சுறுத்தல்கள் மற்றும் கவலைகளுக்கு வழிவகுத்ததுடன் பொருளாதார தாக்கங்கள் குறித்த பரந்த கவலைகளுக்கும் வழிவகுத்தது.
அத்துடன் Ontario மாகாணசபைத் தேர்தல் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கான தேர்தலும் நிலுவையில் உள்ளமை கனடாவின் அரசியல் தளம்பல் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது.
வாடகை விகிதங்கள் பின்வாங்குவதால் பட்டியல்களில் உயர்வு ஏற்பட்டு வருகிறது இருப்பினும் இதுவரை பெரிய விலை மாற்றத்திற்கு வழிவகுக்கவில்லை என Canadian Real Estate Association கூறுகின்றது.
பொருளாதார ரீதியாக அதிகமான பட்டியல்கள் இருந்தால் வாங்குபவர்களுக்கு விலைகளை பேச்சுவார்த்தை நடத்த அதிகமான வாய்ப்புகள் இருக்கும் என்றும், விலைகள் இன்னும் கொஞ்சம் குறைய வேண்டும் என எதிர்பார்பதாக Real Estate தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
ஆனாலும் பெரிய வித்தியாசம் இன்னும் ஏற்படுவதை நாங்கள் காணவில்லை, எனவே அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். வாடகை விகிதங்கள் குறைவதால் பட்டியல்களில் உயர்வு ஏற்பட்டு வருகிறது. January மாதத்தில் 18 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதுமை சுட்டிக்காட்டத்தக்கது.