கனடா செய்திகள்

கனடாவின் Haiti airlift ஆனது குடியிருப்புக்கள், உறவினர்கள் மற்றும் charter flight வசதிகளை கொண்டதாக விரிவாக்கப்படுகின்றது

நிபந்தனைகளுக்குட்பட்டு, புதன்கிழமை முதல் உறவினர்கள் மற்றும் கனேடிய நிரந்தர குடியிருப்பாளர்களை Haitiயிலிந்து வெளியேற்றும் பணியை கனடா விரிவுபடுத்துகிறது. மேலும் சந்தைக் கட்டணத்தைச் செலுத்தும் கனேடியர்களுக்கு Montreal இல் இருந்து Port-au-Prince க்கு பறக்க அரசாங்கம் charter flight இனை ஏற்பாடு செய்துள்ளது.

”நாங்கள் குடும்பங்களைப் பிரிக்க விரும்பவில்லை. ஆகவே நாங்கள் இப்போது நிரந்தர குடியுரிமையுள்ள கனேடியர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் மற்றும் குழந்தைகளை ஏற்றுக்கொள்வோம்” என வெளியுறவு அமைச்சர் Mélanie Joly தெரிவித்தார்.

Haiti யிலிந்து Dominican குடியரசிற்குள் 153 குடிமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விமானங்களில் கனடாவில் நிரந்தர குடியிருப்பாளர்களையும், கனேடியர்களின் வெளிநாட்டு குடும்ப உறுப்பினர்களையும் அனுமதிக்குமாறு Ottawa ஆனது Dominican குடியரசை வலியுறுத்தியிருந்தனர்.

முதல் charter flight இனுள் 80 கனேடியர்களோ அல்லது அவர்களது உறவினர்களோ இருக்க வேண்டும்.

கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, கனடாவுடன் தொடர்புள்ள 3,110 பேர் தானாக முன்வந்து Ottawaவுடன் Haitiயில் தங்கள் இருப்பை பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம் 300 பேர் உதவியை நாடி இருந்தனர். ஆனால் இப்போது மேலும் 200 பேர் வெளியேற்றத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.

​​Ottawa மேற்கு அரைக்கோளத்தில் இருந்து மனிதாபிமான அடிப்படையில் 15,000 புலம்பெயர்ந்தோரை வரவேற்க ஒரு வருடத்திற்கு முன்பு உறுதியளித்தாக குடிவரவு அமைச்சர் Marc Miller குறிப்பிட்டார்.

Related posts

தொழிலாளர் அமைச்சர் Seamus O’Regan தனது அமைச்சரவையில் இருந்து விலக உள்ளார்

admin

ஜூலை மாதத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.2% உயர்வு – கனடா புள்ளிவிவரங்கள் தெரிவிப்பு

admin

Bank of canadaவின் வட்டி விகிதம் 5% இல் நிலையாக உள்ளது.

Editor