Ontario மாகாண லிபரல்ஸ் தலைவரான Bonnie Crombie லிபரல் கட்சியின் கூட்டாட்சி தலைவராக வேட்பாளர் Mark Carney இற்கு செவ்வாயன்று தனது ஆதரவை தெரிவித்துள்ளார். Crombie இந்த வாரம் நடைபெறவுள்ள Ontario மாகாண தேர்தலின் முதல்வர் வேட்பாளர் ஆவார்.
Donald Trump இன் வரிவிதிப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய சரியான முன்னுரிமைகளைக் கொண்ட தலைவர்கள் கனடாவிற்கு தேவை என்பது முன்னெப்போதையும் விட தெளிவாகத் தெரிகிறது. Mark Carney அந்த வகையான தலைவர் என்று நான் நம்புகிறேன், அவருடைய ஆதரவைப் பெற்றதில் நான் பெருமைப்படுகிறேன் என Crombie மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு Bank of Canada ஆளுநராக நியமிக்கப்படும் வரை, கனடா வங்கியிலும் ஒட்டாவாவில் உள்ள நிதித் துறையிலும் சிரேஷ்ட பதவிகளை வகித்த Carney ஓர் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத போதும் பிரதமராகப் பணியாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய பிரதமரை மாற்றீடு செய்வதற்காக லிபரல் கட்சி உறுப்பினர்கள் புதன்கிழமை முதல் முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்க முடியும்.