கனடா செய்திகள்

Trump இன் திட்டம் March 4ஆந் திகதி அமுலுக்கு வரும்

கனடா மீது வரிகளை விதிக்கும் Donald Trump இன் திட்டம் March 04 ஆந் திகதி அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும் வெள்ளைமாளிகையின் உத்தியோகபூர்வ தகவலின்படி அது குறித்தான பேச்சுவார்த்தைகள் இன்னும் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகின்ற போதும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடக்கூடிய முன்னேற்றங்கள் எதுவுமில்லை என தெரியவருகின்றது.

Trump இன் வர்த்தக செயலாளர் Howard Lutnick கூறுகையில் March 04 ஆந் திகதி என்ற வரையறை இன்னும் நீடிப்பதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். எல்லைப்பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதி Trump ஐ கனடா திருப்திப்படுத்தினால் இடைநிறுத்திய காலப்பகுதி நீடிப்பதற்கான சந்தர்ப்பமொன்று கிடைக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சர் Mélanie Joly இந்த வார தொடக்கத்தில் CTV செய்தியிடம் பேசும்போது வரிகள் குறித்து Trump தானாகவேதான் முடிவு எடுப்பார் என்றும் March 04 ஆந் திகதி அவர் வரிகளை தொடர்ந்தால் கனேடிய அரசாங்கம் $155 பில்லியன் கட்டணத் திட்டத்துடன் பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.

வெள்ளை மாளிகையிலிருந்து CTV செய்திக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் Trump இன் வரிகளை விதிக்கும் திட்டம் April மாதத்திலிருந்து பின்தள்ளிப்போவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Ontario இல் அதிகரித்து வரும் Mpox தொற்று நோய் – public health agency

admin

கனேடியர்களுக்கு இரண்டு பில்லியன் புதிய மரங்களை வழங்க Ottawa உறுதி

Editor

CBSA வேலைநிறுத்தமானது விரைவில் எல்லைப் போக்குவரத்தை சீர்குலைக்கும்

admin