ெள்ளிக்கிழமை இரவு Scarborough உள்ள pub இல் கலந்துகொண்டவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 12 பேரைக் காயப்படுத்திய குறைந்தது மூன்று சந்தேக நபர்களை Toronto பொலிஸார் தேடி வருகின்றனர்.
அதாவது இரவு 10:40 மணிக்கு சற்று முன்னதாக Scarborough Town Centre இற்கு அருகிலுள்ள Piper Arms Pub இற்கு முகமூடி அணிந்த மூன்று பேர் நுழைந்ததாகவும் ஒருவர் தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய துப்பாக்கியுடனும் மேலும் இருவர் கைத்துப்பாக்கிகளுடனும் நுழைந்து துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளத் தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், நாங்கள் துப்பாக்கிச்சூட்டு வீடியோக்கள் நிறைய பார்த்திருக்கின்றோம் ஆனால் மக்கள் கூட்டத்தின் நடுவே நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடந்தியமை மிகவும் பயங்கரமானது என்று விபரித்தனர்.
பொலிஸாரின் தகவல்படி குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர் அவர்களில் ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளானவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் 20 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் என தெரியவருகின்றது.
குறித்த pub இன் திறப்பு விழா கொண்டாட்டத்தின் போதே இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, Toronto மாநகர முதல்வர் Olivia Chow தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.