புதிதாக பதவியேற்ற பிரதமர் Mark Carney அமைச்சரவையில் இரண்டு தமிழர்களும் இடம் பிடித்தனர்.தமிழர்களான ஹரி ஆனந்தசங்கரி, அனிதா ஆனந்த் ஆகியோருக்கு இம்முறையும் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளது.அமைச்சரவையில் நீதி அமைச்சர், சட்டமா அதிபர் பதவிகளை புதிதாக ஏற்ற தமிழரான ஹரி ஆனந்தசங்கரி, முன்னர் வகித்த சுதேச உறவுகள், வடக்கு விவகார அமைச்சுப் பதவிகளில் தொடர்கிறார் .அனிதா ஆனந்த் புத்தாக்கம், விஞ்ஞானம் தொழில்துறை அமைச்சராக பதவியேற்றார் .