கனடா செய்திகள்

வீட்டுக் கட்டுமானப் பணிகள் February மாதத்தில் நான்கு சதவீதம் குறைந்துள்ளது

கனடாவில் வீட்டுக் கட்டுமானப் பணிகள் முடிக்கும் ஆண்டு வேகம் January மாதத்துடன் ஒப்பிடும்போது February மாதத்தில் நான்கு சதவீதம் குறைந்துள்ளதாக Canada Mortgage and Housing Corp கூறுகிறது.

பருவகால வீடுகளின் நிர்மாணம் February மாதத்தில் 229,030 அலகுகள் காணப்பட்டதுடன் January மதத்தில் இத்தொகை 239,322 ஆக இருந்தது.
தனி வீடுகளுக்கான கட்டுமானங்கள்
ஒரு சதவீதம் குறைந்ததுடன் ஏனைய அனைத்து வீடுகளின் விகிதம் February இல் ஐந்து சதவீதம் குறைந்ததமையே இந்த சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.

10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கான பருவகால ரீதியாக சரிசெய்யப்பட்ட வருடாந்த தொடக்க வேகம் February இல் ஐந்து சதவீதம் குறைந்து 209,784 ஆக இருப்பதாக CMHC கூறுகிறது, இது ஜனவரியில் 220,074 ஆக இருந்தது.

February இல் பருவகால ரீதியாக சரிசெய்யப்பட்ட வருடாந்த வீட்டுவசதி விகிதத்திற்கான ஆறு மாத நகரும் சராசரி 239,382 ஆக கணிப்பிடப்பட்டுள்ளது. இது January மாதத்தை விட 1.1 சதவீதம் அதிகமாகும்.

Related posts

Trudeau D-Day இன் 80 ஆவது நிறைவை France இன் Juno Beach இல் கொண்டாடவுள்ளார்

admin

Greater Toronto home sales பங்குனி மாதத்தில் வீழ்ச்சி

admin

தற்காலிக குடியேற்றவாசிகளின் எழுச்சிக்காக மத்திய அரசாங்கம் Quebec இற்கு 750 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளது

admin