ஐரோப்பிய மற்றும் NATO நாடுகளும் கனடாவும் பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க தயாராகவுள்ள நிலையில் அமெரிக்கா இது தொடர்பில் அமைதிப் போக்கை கடைப்பிடிப்பதுடன் ரஷ்யாவுடன் நெருங்கிச் செயற்படும் நிலைப்பாட்டில் இருப்பதாக உள்ளது. NATO நாடுகள் குறைந்தது 5% ஐ பாதுகாப்பு செலவினங்களுக்கு பங்களிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ள போதும் அமெரிக்க கடந்த பத்தாண்டுகளில் வெறும் 3.38 சதவீதத்தையே செலவிட்டுள்ளது. இதுவே NATO நாடுகளின் செலவு குறைந்த தொகையாகும்.
NATO நாடுகளுக்கு ரஷ்யா நேரடி அச்சுறுத்தல் உள்ள நாடாக இருக்கின்ற போதும் உக்ரைன் ரஷ்யா யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் ஐ.நா தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்புகளின் போது அமெரிக்கா ரஷ்யாவை குறை கூற மறுத்தமையை கண்டு ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா அச்சமடைந்தன. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio அமெரிக்கா தனது நட்பு நாடுகளை ஒரே இரவில் 5% செலவு இலக்கை எட்ட வேண்டும் என்று வலியுறுத்தவில்லை எனவும் NATO தாங்களாகவே அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நட்பு நாடுகள் அதைச் செலவிட வேண்டும் என தீர்மானித்தார்கள் என்றார்.
மேலும் கருத்துதெரிவித்த அவர் நட்பு நாடுகள் தமது சொந்த திறன்களை அதிகரிக்க வேண்டும் என்றும் இதில் இராணுவ பலம் பிரதானமானது எனவும் சுட்டிக்காட்டிய Rubio அமெரிக்கா விரைவில் 5% இலக்கை அடையும் என்றும் தெரிவித்தார். France 3%-3.5% என்ற இலக்கை அடையத் தயாராகி வருகிறோம் என்று கூறியுள்ளது. இவ்வாறு NATO செலவினங்களை அதிகரிக்க வேண்டுமென ஒரு பக்கம் வாதிட்டாலும் மறுமுனையில் Trump இன் கட்டண அச்சுறுத்தல்கள் பங்குச் சந்தைகளை உலுக்கி வருவதால் உலக பொருளாதாரம் மேலும் பாதிப்படையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
ஆனாலும் அமெரிக்காவின் வரி விதிப்பு NATO வின் செயற்பாடுகளை பாதிக்கவில்லை என கூறிய பொதுச் செயலாளர் Mark Rutte, கடந்த காலங்களிலும் கருத்து வேறுபாடுகள், வரிகள் தொடர்பான பல உதாரணங்களை நாம் பார்த்திருக்கிறோம் என்றார். எதிர்வரும் June மாதம் அடுத்த NATO உச்சிமாநாடு நடைபெறவுள்ள நிலையில் புதிய செலவு இலக்கை நிர்ணயிப்பதில் NATO உறுப்பினர்கள் பணியாற்றி வருவதாக Norway வெளியுறவு அமைச்சர் Espen Barth Eide கூறினார்.