கனடா செய்திகள்

தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலைக்கு அமர்த்தியதற்காக 3 Ontario வணிகங்களுக்கு அபராதம்

அங்கீகரிக்கப்படாத வேலைவாய்ப்புகள் தொடர்பான மத்தியரசின் விசாரணையின் அடிப்படையில் 700 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் அடையாளங்காணப்பட்டதை தொடர்ந்து Ontario வின் மூன்று வர்த்தக நிலையங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கமைய அபராதம் விதிக்கப்பட்டது.

இவற்றில் CDA Landscape Services, TDA Landscape Services மற்றும் SDA Services ஆகிய நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன. 2019 ஆம் ஆண்டு Ontario Provincial Police அதிகாரிகள் வாகனம் செலுத்துவதில் குறைபாடு உள்ளதாக வெளிநாட்டவர் ஒருவரை கைது செய்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொடர்நடவடிக்கையின் விளைவாகவே அங்கீகரிக்கப்படாத தொழிலாளர்களின் வலையமைப்பு இனங்காணப்பட்டது.

விசாரணையின் மூலம் அடையாளம் காணப்பட்ட பல தொழிலாளர்கள் குற்றவியல் குற்றங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என அடையாளங்காணப்பட்டதால் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக Canada Border Services Agency தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு தொடக்கம் கனடாவின் குடியேற்றக் கொள்கைகளை மீறியமைக்காக 16,470 வெளிநாட்டவர்கள் வெளியேற்றியுள்ளதாக CBSA கூறுகிறது.

கனடாவின் எல்லையைப் பாதுகாப்பதற்கும் சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதற்கும் CBSA மற்றும் புலனாய்வாளர்கள், OPP உள்ளிட்டவை விடாமுயற்சியுடன் பணியாற்றும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

Related posts

Justin Trudeau மற்றும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump ஆகியோர் Florida இல் சந்திப்பு

admin

ஆயிரக்கணக்கான பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களால் Toronto இன் தெருக்கள் தாக்கப்பட்டது

admin

Lebanon இல் மனிதாபிமான உதவிக்காக கனடாவினால் $10 மில்லியன் அறிவிக்கப்பட்டுள்ளது

admin