கனடா செய்திகள்

Ontario பாடசாலைகள், குழந்தை பராமரிப்பு நிலையங்களை கட்டுவதற்கு $1.3 பில்லியன் நிதி ஒதுக்கியுள்ளது

Ontario வில் பாடசாலைகளை கட்டவும் அவற்றை விரிவுபடுத்தவும் $1.3 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், புதியதாக 27093 மாணவர்களிற்கான இடங்களையும் மற்றும் 1759 குழந்தை பராமரிப்பு நிலையங்களையும் நிறுவ இந் நிதியானது செலவிடப்படும் எனவும் கல்வி அமைச்சர் Stephen Lecce தெரிவித்தார்.

அடுத்த 10 வருடங்களில் $16 பில்லியன் நிதி செலவிடப்படுவதுடன் ,இக் கட்டுமாணத்திற்கான கால அளவையும் பாதியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

2018 தொடக்கம் 300க்கும் மேற்பட்ட பள்ளி தொடர்பான திட்டங்களிற்கு ஆதரவளித்துள்ளதாகவும் அவற்றில் 100க்கு மேற்பட்டவை நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Related posts

உளவுத்துறை பணிக்குழு வரவிருக்கும் அனைத்து இடைத்தேர்தல்களிலும் வெளிநாட்டு தலையீட்டை கண்காணிக்கும்

admin

Toronto Pearson விமான நிலையத்தில் விமான சேவை வழங்குநர்கள் வேலைநிறுத்தம்

admin

குறைந்த ஊதியம் பெறும் வெளிநாட்டுப் பணியாளர்களைக் கட்டுப்படுத்த குடியேற்ற இலக்குகளை குறைப்பதைக் கனடா கருத்தில் கொள்ள வேண்டும்

admin