கனடா செய்திகள்

Alta இன் Fort McMurray பகுதிகளில் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

Fort McMurray இன் தெற்கு முனையை சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் செவ்வாயன்று Alberta நகரத்தை அச்சுறுத்திய காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்டனர். Beacon Hill, Abasand, Prairie Creek மற்றும் Grayling Terrace ஆகியவற்றில் வசிப்பவர்கள் பிற்பகலில் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டது.

Fort McMurray நிலப்பரப்பில் இருந்து 7.5 கிலோமீட்டருக்குள் நகர்ந்த தீயை அணைப்பதற்காக நான்கு சுற்றுப்புறங்களில் வசிக்கும் 68,000 பேர் வாழ்கின்ற நகரத்தில் சுமார் 6,600 பேர் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டதாக தீயணைப்புத் தலைவர் Jody Butz தெரிவித்துள்ளார்.

Fort McMurray இன் மற்ற பகுதிகளிற்கும், Saprae Creek, Gregoire Lake Estates, Fort McMurray First Nation No. 468, Anzac மற்றும் Rickards Landing Industrial Park சேர்ந்தோருக்கும் அவசரகால வெளியேற்ற எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது.

Edmonton இல் காட்டுத்தீ வெளியேற்றத்தால் இடம்பெயர்ந்தவர்கள் வயது வந்தவர் ஒருவருக்கு $1,250 படியும், ஒரு குழந்தைக்கு $600 படியும் ஏழு நாட்களுக்குப் பிறகு பெற தகுதியுடையவர் என Danielle Smith தெரிவித்தார்.

2016 ஏற்ப்பட்ட காட்டுத்தீ 2,400 வீடுகளை அழித்ததுடன் Fort McMurray மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் 80,000 க்கும் அதிகமானோர் வெளியேற வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.

Related posts

$5 மில்லியன் மதிப்பிலான திருடப்பட்ட கைக்கடிகாரங்கள் தேடுதலில் மீட்பு: Toronto பொலிசார்

admin

April 8 அன்று Ontario வில் தோன்றவுள்ள சூரிய கிரகணம்

admin

பிராந்திய விரிவாக்கத்தைத் தூண்டும் நோக்கிலான ஈரானின் தாக்குதல் – G7 நாடுகள் எச்சரிக்கை

admin