கனடா செய்திகள்

யுத்தம் காரணமாக கனேடிய தூதர்களின் குழந்தைகள் இஸ்ரேலில் இருந்து வெளியேற்றம்

விரிவாக்கப்பட்ட மத்திய கிழக்குப் போரின் அச்சத்திற்கு மத்தியில் கனேடிய இராஜதந்திரிகளின் குழந்தைகளையும் அவர்களின் பாதுகாவலர்களையும் பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு தற்காலிகமாக இடமாற்ற முடிவு செய்ததாக கனேடிய அரசாங்கம் கூறுகிறது. இருப்பினும் தூதரக ஊழியர்கள் தொடர்ந்து இஸ்ரேலில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tel Aviv இல் உள்ள இஸ்ரேலுக்கான கனடா தூதரகம், Beirut இல் உள்ள Lebanon இற்கான கனடா தூதரகம் மற்றும் பாலஸ்தீனிய அதிகாரத்திற்கான கனடாவின் பிரதிநிதி அலுவலகம் ஆகியவை முழுமையாக செயல்பட்டு, தூதரக சேவைகள் உட்பட கனடியர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை தொடர்ந்து வழங்குகின்றன என Global Affairs Canada தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் Lebanon இல் மூத்த Hezbollah தளபதியும் ஈரானில் Hamas இன் உயர்மட்ட அரசியல் தலைவரும் கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் உள்ள பதட்டங்கள் ஒரு முழுமையான போரைப் பற்றிய அச்சத்தைத் தூண்டியுள்ளன. இதன் காரணமாக இஸ்ரேலுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனேடியர்களை அரசாங்கம் எச்சரித்திருந்தது. அத்தோடு West Bank, Gaza Strip, Jerusalem மற்றும் Lebanon ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதையும் அரசாங்கம் அறிவுறுத்துகிறது.

அக்டோபர் 7 அன்று வெடித்த இம் மோதலில் இதுவரை 39,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

Related posts

Air Canada விமானிகளின் வேலைநிறுத்தத்திற்கு முன்னதாக செய்ய வேண்டியவை

admin

முன்னாள் Toronto mayor ஆன Rob Ford இன் நினைவாக Etobicoke இல் உள்ள மைதானம் அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடப்பட்டது

admin

காட்டுத்தீயால் 283 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு இழப்பு – Jasper council தெரிவிப்பு

admin