Donald Trump கனடாவிற்கான தனது வரவிருக்கும் நிர்வாகத்தின் தூதராக முன்னாள் Michigan காங்கிரஸ்காரரான Pete Hoekstra இனை நியமித்துள்ளார். மேலும் இவர் மீண்டும் அமெரிக்காவை முதலிடம் கொடுக்க உதவுவார் எனவும் Trump அறிக்கையொன்றில் தெரிவித்திருந்தார். அமெரிக்க செனட் இவரை இனி இப் பதவிக்கு உறுதிப்படுத்த வேண்டும்.
Trump இன் முதல் பதவிக் காலத்தில் நெதர்லாந்திற்கான அமெரிக்கத் தூதராக Hoekstra பணியாற்றினார், அதே நேரத்தில் 2021 முதல் David Cohen கனடாவிற்கான தற்போதைய அமெரிக்கத் தூதராக இருந்து வருகிறார்.
Hoekstra இன் அனுபவம் மற்றும் கனடாவைப் பற்றிய நேரடி அறிவைப் பாராட்டியதுடன், அவர் அமெரிக்க அரசாங்கத்தில் சிறந்த பணியாக இருப்பார் என முன்னாள் அமெரிக்க அரசாங்க அதிகாரியான Bruce Heyman தெரிவித்தார்.