இந்த கோடை தொடக்கத்தில் 28 வயதான Pickering மனிதனை சுட்டுக் கொன்ற வழக்கில் மூன்றாவது இளைஞனை Toronto போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜூலை 6ஆம் திகதி Warden Avenue மற்றும் Ellesmere Road area பகுதியில் சுலக்ஷன் செல்வசிங்கம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 15 வயது இளைஞன் முதல்தர கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்கிறான்.
Oshawa மற்றும் Stouffville இனைச் சேர்ந்த 15 மற்றும் 16 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டு ஜூலை மாதம் கொலைக் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த ஜோடி ஜூன் 29 மற்றும் ஜூலை 14 க்கு இடையில் 11 கூடுதல் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக 154 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது.