முன்னாள் தலைமை ஆலோசகரும், பிரதம மந்திரி Justin Trudeau இன் நெருங்கிய நண்பருமான Gerald Butts இன் கருத்துப்படி, Chrystia Freeland அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தமை Trudeau இன் கட்சியின் செல்வாக்கை கணிசமாக பலவீனப்படுத்தியுள்ளது எனவும், வரவிருக்கும் தேர்தலில் Liberal தலைவராக Trudeau நீடிப்பார் என்று தான் நினைக்கவில்லை என்றும் கூறினார்.
ஜனவரி 7 ஆம் திகதி சபைக் குழுவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து அரசாங்கத்தை கவிழ்க்க Conservatives கட்சி திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடிய பொது கருத்துக் கணிப்புகள் Conservative தலைவர் Pierre Poilievre ஒரு வருடத்திற்கும் மேலாக Trudeau இனை விட முன்னிலையில் இருப்பதாகக் காட்டுகின்றன. Trudeau இன் சர்ச்சைக்குரிய கார்பன் விலை நிர்ணயம் தொடர்பாக கடந்த ஆண்டிலிருந்து உடனடித் தேர்தலை நடத்த வேண்டும் என்று Conservatives வாதிட்டு வருகின்றனர்.
Conservative MP John Williamson தனது நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஜனவரி 7 ஆம் திகதி நடைபெறும் குழு விசாரணையில் முன்வைக்க திட்டமிட்டுள்ளார், இது ஜனவரி 27 ஆம் திகதி பொது சபையில் நிறைவேற்றப்பட்டால் உடனடி தேர்தலுக்கு வழிவகுக்கும். மேலும் மூன்று Tories இன் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் தோல்வியடைந்த பின்னர், Freeland இன் ராஜினாமாவைத் தொடர்ந்து NDP தலைவர் Jagmeet Singh அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு இப்போது தயாராக இருப்பதாக கூறினார்.