கனடா செய்திகள்

Trump இன் இணைப்பு சம்பந்தமான அச்சுறுத்தல்களிற்கு அதிகம் எதிர்வினையாற்றக்கூடாது என்று அமைச்சரவை அமைச்சர்கள் தெரிவிப்பு

கனடாவின் பிரதமர் Justin Trudeau உம் கனடாவின் premiers உம் ஜனவரி 15 ஆம் திகதி Ottawa இல் சந்தித்து, Trump இடமிருந்து வரும் அச்சுறுத்தல்களுக்கு வரி விதிக்கும் திட்டத்தை இறுதி செய்யவுள்ளார்கள். கனடா மற்றும் மெக்சிகோ மீது 25% இறக்குமதி வரி விதிப்பதாக Trump அறிவித்ததற்கும், கனடாவை 51வது மாநிலமாக மாற்றுவது குறித்த அவரது தீவிரமான பேச்சுக்கும் பதிலளிக்கும் விதமாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் Trump தனது முதல் பதவிக் காலத்தில் கனடாவின் steel மற்றும் aluminum மீது வரிகளை விதித்த போது, கனடா பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க ஏற்றுமதிகளான whisky, chocolate, yogurt, மற்றும் orange juice மீது வரிகளை விதித்தது.

பிரதமர் பதவியில் இருந்து Trudeau இன் ராஜினாமா, Trump இன் அச்சுறுத்தல்களுக்கு கனடாவின் பதிலில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது. Foreign Affairs Minister Mélanie Joly தான் தலைமைத்துவத்தினை நாட போவதில்லை எனக் குறிப்பிட்டதுடன், டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு கனடா அதிகமாக எதிர்வினையாற்றக்கூடாது என்றும், அதே நேரம் அவற்றை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் கூறினார். மேலும் Trump இன் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என Quebec Premier François Legault குறிப்பிட்டார்.

செவ்வாயன்று கனடாவினை அமெரிக்காவுடன் இணைக்க economic force இனைப் பயன்படுத்த போவதாக Trump குறிப்பிட்டார். மேலும் புதன்கிழமை கனடா மற்றும் அமெரிக்காவின் வரைபடத்தை online இல் வெளியிட்ட Trump அதில் அமெரிக்கக் கொடியை இரு நாடுகளின் மீதும் பறக்கவிட்டு “Oh Canada” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

Israel மற்றும் Lebanon உடனடியாக 21 நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டுமென கனடாவும் அதன் நட்பு நாடுகளும் கோரிக்கை விடுப்பு

admin

ஐக்கிய இராச்சியத்தில் ஏற்பட்ட அரசியல் அலை மாற்றத்தைத் தொடர்ந்து Joly தனது புதிய British பிரதிநிதியை சந்திக்கின்றார்

admin

59 சந்தேக நபர்களை கைது செய்த வாகன திருட்டு விசாரணையின் முடிவில் 300 க்கும் மேற்பட்ட திருடப்பட்ட கார்கள் மீட்பு – Toronto police

admin