கனடா செய்திகள்

எதிர்பாராதவிதமாக இடைநிறுத்தப்பட்ட விமான சேவைகளால் நிரம்பிவழியும் விமான நிலையம்

Toronto Pearson விமான நிலையத்திலிருந்து தெற்கு நோக்கிய அனைத்து விமான சேவைகளையும் Sunwing திடீரென இடைநிறுத்தியுள்ளதால் பயணிகள் விமாநிலையத்தில் பெரிதும் அவதியுறுகின்றனர்.

Hotel அனைத்தும் நிறைந்துள்ளதால் கர்ப்பிணிகள், குழந்தைகள், மற்றும் வயது முதிர்ந்தவர்கள் என அனைவரும் விமானநிலையத்தில் படுத்துறங்கும் அளவுக்கு அங்கு அவல நிலை ஏற்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் உடைமைகள் Pearson விமான நிலையத்தில் மலை போல குவிந்து காணப்படுகின்றன.

குளிர்கால புயல் மற்றும் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட விமான விபத்து காரணமாக Sunwing இரண்டாவது நாளாகவும் தனது சேவைகளை இடைநிறுத்தியுள்ளது. தற்போது தாமதமாக வரும் பயணிகள் பாதுகாப்பாக திரும்பி வருவதற்கு முன்னுரிமை அளிப்பதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதை தாங்கள் புரிந்து கொள்வதாகவும் அதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிப்பு கோருவதுடன் இதனை நிவர்த்தி செய்வதற்காக தமது குழு விடாமுயற்சியுடன் போராடி வருவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தங்கள் விடுமுறைகளை இரத்துச் செய்தவர்களுக்கு Sunwing நிறுவனம் 21 வேலைநாட்களுக்குள் முழு தொகையையும் மீளளிப்பதாக உறுதியளித்துள்ளதுடன் பயணப்பொதிகளை உரியவர்களுடன் சேர்க்க தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறுகிறது.

Related posts

wheels coming off அபாயம் காரணமாக கனடாவில் 300க்கும் மேற்பட்ட வாகனங்களை Porsche நிறுவனம் திரும்பப் பெறுகிறது

admin

இந்த வருடத்திற்கான நிதிப்பற்றாக்குறை 23.6 பில்லியன் டாலராக இருக்கும் ; கனேடிய நிதியமைச்சர்

Editor

கனடாவின் digital services tax இற்கு பதிலளிக்கும் வகையில் Google தனது விளம்பரங்களுக்கு புதிய கட்டணத்தை வசூலிக்கவுள்ளது

admin