கனடா செய்திகள்

Montreal இல் நடைபெற்ற லிபரல் தலைமைத்துவ விவாதம்

பிரெஞ்சு மொழியில் திங்கட்கிழமை இரவு Montreal இல் நடைபெற்ற லிபரல் தலைமைத்துவ விவாதத்தில் முக்கியமாக கனடாவின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாது எவ்வாறு அமெரிக்காவை எதிர்கொள்வது என்பது குறித்து லிபரல் தலைமைத்துவ போட்டியாளர்கள் விவாதித்தனர்.

முன்னணியில் இருப்பதாகக் கருதப்படும் Carney கனடா தனது வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதுடன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நட்பு நாடுகளுடனான உறவுகளை அதிகரிப்பதன் மூலமே அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க முடியும் என்றார். மேலும் கனடாவின் மாகாண, பிராந்திய மற்றும் மத்திய அரசாங்கங்கள் Trump இன் அச்சுறுத்தல்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முன்னாள் நிதியமைச்சர் Freeland இன் நிலைப்பாடு போர்க்குணம் கொண்டதாக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கனடா எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக Trump ஐ விமர்சிக்கும் Freeland அமெரிக்கா மீது எதிர்க்கட்டணங்களை கனடா விதிக்க வேண்டும் என்றும் Tesla வாகனங்கள் மீது 100 சதவீத வரிவிதிப்பு உட்பட அமெரிக்காவிற்குள் உள்ளக அழுத்தத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று கூறுகின்றார்.

Trump இன் விருப்பத்தை எதிர்க்க கனடாவுக்கு ஒரு அமைதியான தலைவர் தேவை என்று முன்னாள் அவைத் தலைவர் Gould கூறுகிறார். கனடாவின் வணிகங்கள் மற்ற சந்தைகளில் இடம்பிடிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என்றும், Trump இன் அச்சுறுத்தல்களுக்கு கனேடியர்கள் ஒற்றுமையாக எதிர்வினையாற்றிய விதம் குறித்து தான் பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார்.

Trump உடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றிய பேச்சு அர்த்தமற்றது என்று கூறும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் Montreal தொழிலதிபருமான Baylis கனடா ஏற்கனவே ஒரு வர்த்தக ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது. அதை அமெரிக்க ஜனாதிபதி மதிக்கவில்லை. எனவே கனடா  U.K., Australia மற்றும் New Zealand போன்ற நாடுகளுடன் ஒரு புதிய பொருளாதார கூட்டணியை உருவாக்க வேண்டும் என முன்மொழிகிறார்.

Related posts

மூன்றில் ஒரு பகுதி கனேடியர்கள் 3 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட நிதி ரீதியாக மோசமாக இருப்பதாக உணர்கிறார்கள் – Food Banks Canada

admin

இன்று சில கனேடிய குடும்பங்கள் ஒரு குழந்தைக்கு $620 வரை பெற்றுக்கொள்வார்கள்

admin

Cronobacter காரணமாக Gerber brand baby cereal இனை Health Canada திரும்ப பெறுகின்றது

admin