கனடா செய்திகள்

Trump ஐ சந்திக்க விரும்பும் Carney

Mark Carney பிரதமராக பதவியேற்றதிலிருந்து அமெரிக்கஅதிபர் Donald Trump உடன் விரைவில் ஓர் சந்திப்பை மேற்கொள்ள விரும்புவதாக அமெரிக்காவிற்கான கனேடியத் தூதர் Kirsten Hillman கூறுகிறார்.

அமெரிக்காவுடன் Carney சிறந்த உறவை உருவாக்க முயற்சிப்பதாகவும், அமெரிக்க பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் Trump என்ன செய்ய முயற்சிக்கின்றாரோ அதனையே பிரதமரும் கனடாவிற்கு செய்ய நினைக்கின்றார் எனினும், கடந்தவாரம் அமெரிக்காவின் வர்த்தகச் செயலாளர் Howard Lutnick உடனான சந்திப்பு கனடாவிற்கு சாதகமாக அமையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் இன்று தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக France மற்றும் U.K சென்றுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகள் குறித்துப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்வது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

Related posts

கடைசி நிமிட கோரிக்கையை முன்னிட்டு அடுத்த வாரம் Haiti யை நோக்கிய விமானத்துற்கு ஏற்பாடு

admin

Ruby Dhalla கட்சி விதிகள் பலவற்றை மீறியதாக கட்சியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

canadanews

Project Odyssey இன் ஒரு பகுதியாக Peel பொலீசாரால் $33M மதிப்புள்ள திருட்டு வாகனங்கள் மீட்பு

admin