கனடா செய்திகள்

மோசடி விசாரணைகளை எதிர்கொண்டுள்ள Cricket Canada

Cricket Canada வின் தற்போதைய நிறைவேற்று அதிகாரி Salman Khan, Syed Wajahat Ali என்பவருடன் சேர்ந்து Calgary மற்றும் District Cricket லீக்கின் பொறுப்பதிகாரியாக இருந்த காலத்தில் அதிகமான திருட்டு மற்றும் $5,000 க்கும் அதிகமான மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கையைத் மேற்கொள்வதற்காக சட்ட மற்றும் நிர்வாக நிபுணர்களுடன் கலந்தாலோசித்து வருவதாக Cricket Canada தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை Cricket Canada வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக, தொடர்சியாக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்திக்கொள்வதாகவும் தனது உறுப்பினர்கள், பங்குதாரர்கள் மற்றும் கனடாவில் உள்ள கிரிக்கெட் சமூகத்திற்கு உறுதியளிக்க விரும்புகின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

Calgary league இன் புதிய தலைவர் மோசடிகளில் ஈடுபட்டமை உள்ளக கணக்காய்வில் கண்டறியப்பட்டதை தொடர்ந்து league பொலிஸாரை தொடர்புகொண்டது. Calgary Police Service இன் விசாரணையின் மூலம் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் January 2014 தொடக்கம் December 2016 வரை லீக்கிலிருந்து சுமார் $200,000 பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது.

லீக்கின் Clubhouse மற்றும் மைதானங்களை புனரமைப்பு செய்வதற்காக பணம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்றபோதும் வேலைகள் ஒருபோதும் முடிக்கப்படவில்லை என்பதுடன் தரமற்ற தயாரிப்புக்களும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனினும் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

இது தொடர்பாக Khan கூறும்போது குற்றச்சாட்டுகளை முற்றிலும் பொய் எனவும் இதை நான் தெளிவுபடுத்துவேன் என்றும் பொலிஸார் எனக்கு எதிராக நிரூபிக்க எதுவும் இல்லை என்றும் கூறினார் அத்துடன் நான் கவலைப்படவில்லை. கடந்த எட்டு வருடங்களாக நான் செய்து வருவதைப் போலவே போராடவும் நான் தயாராக இருக்கிறேன் என்றார்.

Related posts

தெற்கு Ontario இன் Toronto பகுதியில் ஜூலையில் ஏற்ப்பட்ட திடீர் வெள்ளம் $940M காப்பீடு செய்யப்பட்ட சேதத்தை ஏற்படுத்தியுள்ளது

admin

கனடாவின் digital services tax இற்கு பதிலளிக்கும் வகையில் Google தனது விளம்பரங்களுக்கு புதிய கட்டணத்தை வசூலிக்கவுள்ளது

admin

கனேடியர்கள் அதிக காட்டுத்தீ மற்றும் சூறாவளிகளுக்கு தயாராக இருக்க வேண்டும் – Environment Canada

admin