கனடா செய்திகள்

வீட்டுக் கட்டுமானப் பணிகள் February மாதத்தில் நான்கு சதவீதம் குறைந்துள்ளது

கனடாவில் வீட்டுக் கட்டுமானப் பணிகள் முடிக்கும் ஆண்டு வேகம் January மாதத்துடன் ஒப்பிடும்போது February மாதத்தில் நான்கு சதவீதம் குறைந்துள்ளதாக Canada Mortgage and Housing Corp கூறுகிறது.

பருவகால வீடுகளின் நிர்மாணம் February மாதத்தில் 229,030 அலகுகள் காணப்பட்டதுடன் January மதத்தில் இத்தொகை 239,322 ஆக இருந்தது.
தனி வீடுகளுக்கான கட்டுமானங்கள்
ஒரு சதவீதம் குறைந்ததுடன் ஏனைய அனைத்து வீடுகளின் விகிதம் February இல் ஐந்து சதவீதம் குறைந்ததமையே இந்த சரிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.

10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களுக்கான பருவகால ரீதியாக சரிசெய்யப்பட்ட வருடாந்த தொடக்க வேகம் February இல் ஐந்து சதவீதம் குறைந்து 209,784 ஆக இருப்பதாக CMHC கூறுகிறது, இது ஜனவரியில் 220,074 ஆக இருந்தது.

February இல் பருவகால ரீதியாக சரிசெய்யப்பட்ட வருடாந்த வீட்டுவசதி விகிதத்திற்கான ஆறு மாத நகரும் சராசரி 239,382 ஆக கணிப்பிடப்பட்டுள்ளது. இது January மாதத்தை விட 1.1 சதவீதம் அதிகமாகும்.

Related posts

மோசடி விசாரணைகளை எதிர்கொண்டுள்ள Cricket Canada

canadanews

2032 இல் NATO இன் பாதுகாப்பு வரவு செலவுத் திட்ட இலக்கை அடைவதை கனடா நோக்கமாகக் கொண்டுள்ளது – Trudeau

admin

800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, WestJet நிர்வாகிகள் மத்திய அரசிடம் உடனடியான தெளிவு வேண்டியுள்ளனர்

admin