கனடா செய்திகள்

அமெரிக்க வரி விதிப்புக்களில் இருந்து தப்பிக்கொள்ளுமா கனடா?

கனடாவுக்கு எதிரான வரி இடைநிறுத்தம் நீக்கப்படுமா என்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் Donald Trump புதன்கிழமையை விடுதலை நாள் என்று அழைத்தார் அதாவது ஏனைய நாடுகள் மீது வரிகளை விதிப்பதன் மூலம் அமெரிக்க வருமானத்தை அதிகரிக்க அவர் விரும்புவதை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை Trump விதிக்கவுள்ள வரிகளில் கனடா மற்றும் மெக்சிக்கோ நாடுகள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படுமா என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை என வெள்ளைமாளிகை அதிகாரியொருவர் கூறியுள்ள நிலையில் வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் Karoline Leavitt திங்கட்கிழமை கருத்து தெரிவிக்கும் போது வரி விலக்குகள் எதுவும் இருக்காது என்று கூறினார்.

தற்போது கனடா எல்லையில் கைப்பற்றப்படும் fentanyl அளவு குறைவு என்பதுடன் கடந்த வாரம் வெளியிடப்பட்ட வருடாந்த அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கையில், சட்டவிரோத மருந்துகள் மற்றும் fentanyl பிரிவில் கனடா குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமெரிக்காவினால் வியாழக்கிழமை தொடக்கம் விதிக்கப்படவுள்ள automobiles வரியானது ஒவ்வொரு Car உம் எவ்வளவு வெளிநாட்டு பொருட்களைக்கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றது என்பதை கண்டறிய ஓர் கட்டமைப்பு நிறுவப்படும் அதனடிப்படையிலேயே வரியும் தீர்மானிக்கப்படவுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

புதன்கிழமை தொடக்கம் அமெரிக்காவின் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகிறது என்பது குறித்து அறிய கனேடிய அதிகாரிகள் தொடர்ந்தும் Trump இன் குழுவினருடன் தொடர்பில் உள்ளனர். Ontario முதல்வர் கடந்தவாரம் அமெரிக்க வர்த்தக செயலாளர் Howard Lutnick உடன் கலந்துரையாடியபோதும் இது குறித்து எவ்வித தகவல்களும் பரிமாறப்படவில்லை எனினும் கடந்த வாரம் Mark Carney மற்றும் Donald Trump ஆகியோருக்கிடையிலான தொலைபேசி உரையாடல் சுமுகமாக நடைபெற்றதற்கமைய இரு நாடுகளுக்குமிடையிலான விரோதப்போக்கு குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

உலகளாவிய ரீதியில் ஏற்ப்பட்ட IT செயலிழப்பைத் தொடர்ந்து கனடாவின் விமான நிலையங்கள், மருத்துவமனைகளின் செயல்பாடுகள் மீண்டும் தொடக்கம்

admin

சமீபத்தில் விலகிய மற்றும் மீண்டும் போட்டியிடத் திட்டமிடாத Liberal அமைச்சரவை அமைச்சர்களின் பட்டியல்

admin

வியாழன் முதல் 4,100 Ontario convenience stores மது விற்பதற்கான உரிமம் பெற்றுள்ளன

admin