18 January 2024 இன்று கனேடிய ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம்,
கனேடிய வணிகங்கள் தொற்றுநோய்க்கால கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கும் பகுதியளவு தள்ளுபடியைப் பெறுவதற்குமான கால அவகாசம் முடிவடைந்துவிட்டது என்றும்,
COVID-19 தொற்றுநோயின் போது இலட்சக்கணக்கான வணிக நிறுவனங்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் $60,000 வரை வட்டியில்லா கடனாக கனடா அவசர வணிகக் கணக்குக் கடனாகப் பெற்றன.
இன்றைய நாளுக்குள்(18 january ) நிலுவைத் தொகையை செலுத்தினால் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு தள்ளுபடி செய்யப்படலாம், இல்லையெனில் கடன் தொகை 5% வருடாந்த வட்டியுடன் மூன்றாண்டு கடனாக மாறும் எனகுறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடையம் தொடர்பில் நேற்று புதன்கிழமை (17.01.2024, பிரதமர் Justin Trudeau கருத்து தெரிவிக்கையில்,தொற்றுநோய்க்கான நிதி உதவி திட்டங்களை முடிக்க வேண்டிய நேரம் இது என்று கூறினார்.