மளிகைப் பொருட்களின் விலை உயர்வை விசாரிக்க உதவும் வகையில், வாடகைக்குக் கட்டுப்படியாகக்கூடிய வகையில் $99 மில்லியன் புதிய நிதியுதவியும், $5 மில்லியன் வருடாந்திர செலவினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland புதுமை, அறிவியல் மற்றும் தொழில்துறை அமைச்சர் Francois-Philippe champagne ஆகியோர் கனடாவின் பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய செலவினங்களை அறிவித்துள்ளனர் .
அதற்கமைய வீடற்ற நிலையை அனுபவிக்கும் மக்களுக்கு தங்குமிடங்களை வழங்குவதற்கும், தற்காலிக வாடகை உதவி மற்றும் சூடான உணவு போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கி உதவும் வகையில், $100-மில்லியன் நிதியுதவி செய்யப்படும் என Freeland தெரிவித்தார்.
இலாப நோக்கற்ற நுகர்வோர் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கான கனடாவின் பங்களிப்புத் திட்டத்திற்கான வருடாந்திர நிதியுதவியை $5 மில்லியனாக மூன்று மடங்காக உயர்த்துவதன் மூலம் மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் மலிவு விலையை நிவர்த்தி செய்யலாம் என Ottawa முயற்சிக்கிறது.
அதிகரித்த நுகர்வோர் விலைகள் தொடர்பிலும், விலைகளை நிலையாகப்பேண போட்டியை அதிகரிப்பது அவசியம் எனவும், அவ்வாறு செய்ய எங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும் நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது Champagne கூறினார்.
மேலும்,எங்களிடம் ஒரு பொருளாதாரத் திட்டம் உள்ளது என்பதையும் எங்கள் அற்புதமான நாட்டில் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தைத் திறக்க அந்தத் திட்டத்தில் இன்னும் நிறைய வேலைத்திட்டங்கள் உள்ளடக்கப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.