கனடா செய்திகள்

பல் மருத்துவர்களை அதிகரிக்கும் வகையில் பல் பராமரிப்பு மாற்றங்களை செய்ய வேண்டும் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

Ottawa இல் அதிக பல் மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் மற்றும் வாய்வழி சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் பங்கேற்கும் வகையில் புதிய பல் பராமரிப்புத் திட்டத்தில் மாற்றங்களை சுகாதார அமைச்சர் Mark Holland புதன்கிழமை அறிவித்தார்.

1.7 மில்லியன் முதியவர்கள் ஏற்கனவே பதிவு செய்திருந்த  போதிலும், புதிய கூட்டாட்சி திட்டத்தின் கீழ் சுகாதாரப் பராமரிப்பை வழங்க தங்கள் உறுப்பினர்கள் மெதுவாக பதிவுசெய்துள்ளதாக பல் மற்றும் சுகாதார நிபுணர்கள் சங்கங்கள் தெரிவித்துள்ளது. இதுவரை சுகாதார நிபுணர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் உட்பட 5000 பல் பராமரிப்பு வழங்குநர்கள் பதிவு செய்துள்ளதாக Liberals தெரிவித்துள்ளனர்.

ஆடி மாதத்திலிருந்து இத் திட்டத்தில் கையொப்பமிடாமல் சேவைகளுக்கான நேரடி ரசீதுகளை அரசாங்கம் வழங்குநர்களிற்கு அனுமதிப்பதாகவும் இதன் மூலம் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்த முடியும் எனவும் Holland தெரிவித்தார்.

$13 பில்லியன் பல்மருத்துவத் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முன்கூட்டிய தேர்தலைத் தடுப்பதற்காக NDP உடன் Liberals செய்துகொண்ட ஒப்பந்தத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். மேலும் இத் திட்டமானது 2025 இல் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் போது 9 மில்லியன் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு பல் மருத்துவ பாதுகாப்பினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Newfoundland மற்றும் Labrador இனை தாக்கிய புயல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களிற்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது

admin

உக்ரேனியர்களுக்காக நீடிக்கப்பட்டுள்ள வீசா நடைமுறை.

canadanews

கனடாவில் $18.4billion மின்சார வாகனங்கள் மற்றும் Battery plant களை உருவாக்குவதற்கு “HONDA”நிறுவனம் பரிசீலனை.

Editor