நாடு முழுவதிலும் கோடை காலத்தில் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், Manitoba இன் கிழக்கே எல்லா இடங்களிலும் அதிக வெப்பநிலை காணப்படும் எனவும் Environment Canada கணித்துள்ளது.
Ontario இன் கிழக்கு பகுதி தொடக்கம் Manitoba எல்லை வரை அதிக வெப்பம் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் என்றும், இவ் வெப்பநிலை Alberta இல் 50 சதவிகிதமாகவும் காணப்படும். மேலும் கடலோர British Columbia மற்றும் Yukon இல் கனடாவின் சாதாரண வெப்பநிலை நிலவும்.
அதிக வெப்பநிலை காட்டுத்தீ மீது தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், இவ் வெப்பம் மண்ணை உலர்த்தும், மேலும் பனி மலைகள் வருடத்திற்கு முன்பே உருகும். கோடையின் பிற்பகுதியில் மத்திய கனடாவில் காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கும் என்று கணித்துள்ளடாக Environment Canada இன் காலநிலை நிபுணர் Nathan Gillett தெரிவித்தார்.