கனடா செய்திகள்

Conservatives மூலதன ஆதாய வரி சீர்திருத்தங்களுக்கு எதிராக உள்ளனர்

கனேடிய வரிவிதிப்புக்கு உட்பட்ட மூலதன ஆதாய வரியின் சதவீதத்தை உயர்த்துவதற்கான பிரேரணை செவ்வாய்க்கிழமை House of Commons இல் நிறைவேற்றப்பட்டது. NDP, Bloc Québécois மற்றும் Greens கட்சியினர் Liberals உடன் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர், அதே நேரத்தில் Conservatives எதிராக வாக்களித்தனர்.

தற்போது கனேடியர்கள் தங்களின் மூலதன ஆதாயத்தில் 50 சதவீதத்திற்கு மட்டுமே வரி செலுத்துகிறார்கள். மாற்றத்தின் காரணமாக மூலதன ஆதாயங்கள் மீதான corporations வரிவிதிப்பு இப்போது 66 சதவீதமாக இருக்கும். ஒரு தனிநபரின் மூலதன ஆதாயம் ஒரு வருடத்தில் $250,000ஐத் தாண்டினால், அவர்கள் 66 சதவீத வரிவிதிப்புக்கு உட்பட்டவர்களாக இருப்பார்கள்.

அடுத்த தசாப்தத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான விவசாயிகள் ஓய்வு பெறக்கூடும் என்பதால், மூலதன ஆதாய வரி அதிகரிப்பு மிகவும் தீங்கு விளைவிப்பதாக கனடாவின் தானிய உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த மாற்றம் ஐந்து ஆண்டுகளில் $19 பில்லியன் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

Ottawa நகரில் பாராளுமன்ற தொகுதிக்குள் நுழைந்த நபரால் பரபரப்பு.

canadanews

Scarborough இலுள்ள Woodside Square Cinemas இல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது

admin

April 2 ஆந் திகதி முதல் அமுலாகும் 25 சதவீத வரி

canadanews