கனடா செய்திகள்

Trudeau இனை உக்ரைனின் நண்பராகவும் உறுதியான பாதுகாவலராகவும் NATO இன் தலைவர் குறிப்பிடுகின்றார்

பிரதம மந்திரி Justin Trudeau மற்றும் NATO பொதுச்செயலாளர் Jens Stoltenberg ஆகியோர் புதன்கிழமை Rideau Cottage இல் ஒரு தனிப்பட்ட இரவு விருந்தில் சந்தித்தனர். இவர்கள் இருவரும் ஒன்பது ஆண்டுகால சக ஊழியர்களாகவும் நண்பர்களாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இரவு உணவிற்கு அடுத்த நாள் Stoltenberg Ottawa இல் உள்ள கனடியன் Press உடன் அமர்ந்து கனடாவுடனான தனது உறவைப் பற்றி விவாதித்தார்.

மேலும் Stoltenberg ரஷ்யா Crimeaவை இணைத்த ஒரு வருடத்திற்குப் பிறகு, 2015 இல் அவர் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட போது உக்ரைனின் தீவிர ஆதரவாளராக இருந்ததற்காக பிரதமர் Trudeau இனைப் பாராட்டினார்.

இந்த ஆண்டு தனது மறுதேர்தலுக்கான பேரணியில், போதுமான பணம் செலுத்தாத எந்தவொரு நேட்டோ உறுப்பினருக்கும் அவர்கள் விரும்பியதைச் செய்ய ரஷ்யாவை ஊக்குவிப்பதாக Trump கூறினார். கனடா அந்தக் கருத்துக்களை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டபோது, ​ Trump இன் கூற்றுகளை Stoltenberg நிராகரித்தார்.

ஐரோப்பிய நட்பு நாடுகள் மற்றும் கனடா முழுவதும் பாதுகாப்புச் செலவுகள் இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 18 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் இது பல தசாப்தங்களில் மிகப்பெரிய அதிகரிப்பு எனவும் வெள்ளை மாளிகையில் ஒரு உரையின் போது Stoltenberg தெரிவித்தார்.

Trudeau பதவியேற்றதிலிருந்து உக்ரைனை தனது வெளியுறவுக் கொள்கையின் சிறப்பம்சமாக மாற்றியுள்ளதையும், 2022 முழு அளவிலான படையெடுப்பிற்கு முன்பே கனடா உக்ரைனுக்கு உதவியாக இருந்தமையையும் Stoltenberg குறிப்பிட்டார்.

Related posts

லிபரல் கட்சியின் தலைமைத்துவத்திற்கான போட்டியிலிருந்து விலகினார் Jaime Battiste

canadanews

2030 ஆம் ஆண்டிற்குள் கனடா 1.3 மில்லியன் கூடுதல் வீடுகளை கட்ட வேண்டும் – PBO அறிக்கை

admin

Haitiயில் இருந்து பாதிக்கப்படக்கூடிய கனேடிய குடிமக்களை கனடா வெளியேற்றுகிறது – Joly

admin