கனடா செய்திகள்

May மாத பணவீக்க விகிதம் உயர்வைத் தொடர்ந்து Bank of Canada அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வு

வருடாந்திர பணவீக்க விகிதம் May மாதத்தில் எதிர்பாராத விதமாக உயர்ந்தது. April மாதத்தில் 2.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், May மாதத்தில் ஆண்டு விகிதம் 2.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கனடா புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வருடாந்த பணவீக்க விகிதத்தை இரண்டு சதவிகிதம் இலக்காகக் கொண்ட Bank of Canada இன் முடிவைத் தொடர்ந்து, இந்த மாத தொடக்கத்தில் அதன் benchmark வட்டி விகிதத்தை கால் சதவிகிதம் குறைத்து 4.75 சதவிகிதமாக மாற்றியுள்ளது.

Bank of Canada இன் பணவியல் கொள்கை அறிக்கையில் அதன் சமீபத்திய பொருளாதாரக் கண்ணோட்டத்தைத் தொடர்ந்து, அதன் அடுத்த வட்டி விகித முடிவு July 24 ஆம் திகதி திட்டமிடப்பட்டுள்ளது. பணவீக்க அறிக்கையைத் தொடர்ந்து, நிதிச் சந்தைகள் July மாதத்தில் வட்டி விகிதக் குறைப்புக்கான சாத்தியக்கூறுகளைக் குறைத்துள்ளன.

April மாதத்திற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்களையும் June மாதத்திற்கான தொழிலாளர் கணக்கெடுப்பு மற்றும் அதன் வணிகக் கண்ணோட்டம் மற்றும் கனேடிய நுகர்வோர் எதிர்பார்ப்புகளின் கணக்கெடுப்பு ஆகியவற்றை July 15 அன்று Statistics Canada வெளியிடும். இவ் வரவிருக்கும் தரவுகளை மத்திய வங்கி ஆய்வு செய்யும்.

சேவைகளுக்கான விலைகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 4.6 சதவீதம் உயர்ந்துள்ளது. அடமான வட்டி செலவுகள் ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 23.3 சதவீதம் உயர்ந்துள்ளது, அதே சமயம் வாடகை விலை 8.9 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட பெட்ரோல் விலை 5.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

Related posts

Montrealலில் $34.5 மில்லியன் மதிப்புள்ள திருட்டு வாகனங்கள் shipping containers இல் இருந்து மீட்பு

admin

Newmarket இல் துப்பாக்கிகள், போதைப்பொருள்கள் போலீசாரால் கைப்பற்றல் – 3 சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு

admin

கனடாவின் மக்கள்தொகை 63 மில்லியனை எட்டும் என கணிப்பு – 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிப்பு

admin