கனடா செய்திகள்

Toronto, GTA இல் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம்

Toronto மற்றும் Greater Toronto Area (GTA) பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்தது. காலை மற்றும் பிற்பகல் முழுவதும் 125 மில்லிமீட்டர் மழை பெய்யும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்ததால் Toronto இற்கு மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. கனடாவின் வானிலை நிறுவனம் சில உள்ளூர் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்குள் 40 மில்லிமீட்டர் மழை பெய்யும் என தெரிவித்தது. இதை தொடர்ந்து செவ்வாய்க் கிழமை காலை பல சாலைகள் மற்றும் சில Toronto Transit Commission (TTC) நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

Toronto, Vaughan, Richmond Hill, Markham, Mississauga, Brampton, Halton Hills, மற்றும் Milton போன்ற நகரங்களுக்கு மிக கனமழை பெய்யும் என்று சுற்றுச்சூழல் கனடா கணித்திருந்தது. வெள்ளம் காரணமாக Lake Shore Boulevard இன் மேற்கு மற்றும் கிழக்கு நோக்கிய பகுதிகளில் Newfoundland சாலையில் இருந்து Ontario Drive அப்பால் பாதைகள் தடுக்கப்பட்டன. தற்போது Lake Shore Boulevard ஆனது British Columbia சாலையில் இருந்து Strachan Avenue வரை இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.

மருத்துவ தேவைகளிற்காக 911 அழைப்புகளும், Fire சேவைகளிற்காக 1700 அழைப்புகளும், மீட்பு தேவைகளிற்காக 50 அழைப்புகளும், நீர் வசதிகள் குறித்து 50 அழைப்புகளும் பெற்றுக் கொள்ளப்பட்டதாக Toronto காவல் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், புயலைத் தொடர்ந்து சுமார் 20 பள்ளிகளில் மின்சாரம் இல்லை என்றும், சில பள்ளிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் Toronto District School Board கூறுகிறது.

தெற்கு நோக்கிய Don Valley Parkway ஆனது Bayview Avenue இல் இருந்து Gardiner Expressway வரை மூடப்பட்டுள்ளது. பாதசாரிகளிற்கான சுரங்கப்பாதை வெள்ளத்தில் மூழ்கியதை அடுத்து, Billy Bishop விமான நிலையத்தையும் வெள்ளம் பாதித்துள்ளதால், அதை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Related posts

2020 இல் நடந்த மோசடியான Belarus தேர்தலின் ஆண்டு நிறைவையொட்டி கனடா அபராதம் விதிப்பு

admin

Ukraine, Latvia இற்கு மேலும் பல உதவிகள் – பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

admin

கூட்டுறவு வீடுகளை உருவாக்க Liberal அரசாங்கத்தினால் $1.5B திட்டம் அறிவிப்பு

admin