கனடா செய்திகள்

எரிவாயு விலையில் ஏற்ப்பட்டுள்ள மெதுவான வளர்ச்சி – June மாதத்தில் பணவீக்கம் 2.7% ஆக குறைவு

கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் June மாதத்தில் 2.7 சதவீதமாக குறைந்துள்ளது, இது May மாதத்தில் 2.9 சதவீத வளர்ச்சியில் இருந்து குறைந்துள்ளது என கனடா புள்ளியியல் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளது. பெட்ரோலின் விலையில் ஆண்டுக்கு ஆண்டு ஏற்ப்படும் மெதுவான வளர்ச்சியே இந்த வீழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆகும்.

May மாதத்தில் பெட்ரோல் விலை 5.6 சதவிகிதம் உயர்ந்ததைத் தொடர்ந்து June மாதத்தில் 0.4 சதவிகிதம் உயர்ந்ததாக நிறுவனம் கூறியது. தொடர்ந்து இரண்டாவது மாதமாக மளிகைப் பொருட்களின் விலையில் வளர்ச்சி வேகம் அதிகரித்துள்ளது. மளிகைப் பொருட்களின் விலைகள் ஜூன் மாதத்தில் ஆண்டுக்கு 2.1% அதிகரித்துள்ளதுடன், மே மாதத்தில் 1.5% அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிய காய்கறிகள் 3.8 சதவிகிதம் மற்றும் பால் பொருட்களின் விலை இரண்டு சதவிகிதம் அதிகரித்தது. பாதுகாக்கப்பட்ட பழங்கள் மற்றும் பழ தயாரிப்புகளின் விலை 9.5 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் மது அல்லாத பானங்களின் விலை 5.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

Related posts

கனேடிய,வேலையின்மை விகிதம் 5.8% ஆக உயர்வு;

Editor

Barrhaven நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்த சந்தேக நபர் இன்று Ottawa நீதி மன்றில் முன்னிலை;

Editor

இந்த வருடத்திற்கான நிதிப்பற்றாக்குறை 23.6 பில்லியன் டாலராக இருக்கும் ; கனேடிய நிதியமைச்சர்

Editor