பிரதம மந்திரி உட்பட உயர்மட்ட கூட்டாட்சி அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு ஆல்பர்ட்டா ஆண்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பிரதமர் Justin Trudeau இனைக் கொல்வதாக May மாதம் மிரட்டல் விடுத்து சமூக ஊடகப் பயனர் ஒருவர் X தளத்தில் படிவிட்டதாக RCMP கூறுகின்றது. மேலும் இவர் Calgary இனைச் சேர்ந்த இருபத்தி மூன்று வயதான மேசன் John Baker எனத் தெரிய வந்துள்ளது.
இந்த June மாதம் மற்றொரு YouTube பயனர், துணைப் பிரதமர் Chrystia Freeland மற்றும் கூட்டாட்சி NDP தலைவர் Jagmeet Singh ஆகியோருடன் சேர்ந்து Trudeau இனையும் கொல்லப் போவதாக மிரட்டல் விடுத்தார். இவர் Edmonton இனைத் தளமாகக் கொண்ட 67 வயதான Garry Belzevick எனத் தெரியவந்துள்ளது. இவ் இருவரும் இந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.