Liberal அரசாங்கத்தின் digital services வரியின் விலையை விளம்பரதாரர்களுக்கு வழங்குவதாக Google தெரிவித்துள்ளது. மேலும் கனடாவில் காட்டப்படும் விளம்பரங்களுக்கு அக்டோபர் மாதம் முதல் 2.5 சதவீதம் கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
June மாதம் பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட இந்த வரியானது கனேடிய பயனர்களிடமிருந்து வருவாயை ஈட்டும் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கூடுதல் 3% வரி விதிக்கப்படும். கனேடிய விளம்பரதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தகக் குழு பிற வணிகங்கள் Google இன் முன்மாதிரியைப் பின்பற்றலாம் என்று எச்சரித்துள்ளது.
digital services வரியானது அமெரிக்காவில் உள்ள வர்த்தக சங்கங்கள் மற்றும் வணிகக் குழுக்களிடமிருந்து எதிர்ப்பை ஈர்த்துள்ளது. Amazon, Apple மற்றும் Uber உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் Computer and Communications Industry Association ஆனது U.S.-Mexico-Canada ஒப்பந்தத்தை முறையாக செயல்படுத்த அமெரிக்க ஜனாதிபதி Joe Biden இன் நிர்வாகத்திற்கு முன்பு அழைப்பு விடுத்திருந்தது.