கனடா செய்திகள்

கனமழையால் GTA முழுவதும் ஏற்ப்பட்ட பாரிய வெள்ளம்

Greater Toronto பகுதி முழுவதும் சனிக்கிழமை பிற்பகல் ஏற்ப்பட்ட கனமழையால் வாகன நிறுத்துமிடங்கள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேலும் கனமழை காரணமாக Toronto Pearson International Airport இன் இரண்டு முனையங்களிலும் கசிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு நீர் கட்டுக்குள் இருப்பதாகவும், சுத்தம் செய்யும் பணி நடந்து வருவதாகவும் விமான நிலையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மழை காரணமாக பல விமானங்கள் திசைதிருப்பப்பட்டு தரை தாமதங்கள் ஏற்பட்டதாகவும், வந்து செல்ல வேண்டிய 14 சதவீதத்திற்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டடாகவும் தெரிவிக்கப்பட்டது.

Toronto மற்றும் தெற்கு Ontario இன் பெரும்பாலான பகுதிகள் சூறாவளி, கடுமையான இடியுடன் கூடிய மழை மற்றும் மழைப்பொழிவு எச்சரிக்கைகள் உட்பட நாள் முழுவதும் பல வானிலை ஆலோசனைகளின் கீழ் இருந்தன. இந்த நிலையில் சனிக்கிழமை சில இடங்களில் சனிக்கிழமை பிற்பகல் 100 மில்லிமீட்டர் மழை பெய்ததாக Environment and Climate Change Canada (ECCC) தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலை 409க்கும் நெடுஞ்சாலை 401க்கும் இடைப்பட்ட நெடுஞ்சாலை 427 வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக Ontario மாகாண காவல்துறை கூறியுள்ளது. Don பள்ளத்தாக்கு Parkway இல் இருந்து Bayview Avenue இற்குச் செல்லும் பாதை, வெள்ளம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக Toronto நகரம் தெரிவித்துள்ளது.

Related posts

4 Nations Face-Off இறுதிப் போட்டியில் கனடா வெற்றிபெற்றது!

canadanews

கனடா விற்பனைக்கு இல்லை: Ontario மாகாண முதல்வர் Doug Ford

canadanews

நாளொன்றுக்கு $10 குழந்தை பராமரிப்பு திட்டத்திற்கான operators இன் எதிர்ப்பு காரணமாக பல GTA தினப்பராமரிப்புகள் செவ்வாய்கிழமை மூடப்படலாம்

admin