கனடா செய்திகள்

கிட்டத்தட்ட பாதி மாணவர்கள் உணவு மற்றும் தங்குமிடம் போன்ற தேவைகளுக்கு பணம் செலுத்த போராடுகிறார்கள்

கனேடிய மாணவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் உணவு மற்றும் வீடு போன்ற அடிப்படைத் தேவைகளை போதுமான அளவு பூர்த்தி செய்ய முடியவில்லை என்று கூறுகிறார்கள். மேலும் online கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 45 சதவீதம் பேர் தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது என்று கூறியதுடன், 65 சதவீத மாணவர்கள் தங்களை நிதி ரீதியாக நிலையற்றவர்கள் என்று வரையறுப்பதாகவும் TD வங்கியின் புதிய கணக்கெடுப்பு அறிக்கை கூறுகின்றது.

வாக்களிக்கப்பட்ட மாணவர்களில் 64% பேர் தங்கள் செலவினங்களைக் கண்காணிக்கும் வகையில் பட்ஜெட் வைத்திருப்பதாகக் கூறுகின்றனர், ஆனால் 41% பேர் அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியும் என்று நினைக்கிறார்கள். கூடுதலாக இரண்டாம் நிலை மாணவர்களின் 94% பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஏதோ ஒரு வகையில் நிதி உதவி செய்வதாக அறிக்கையில் கூறியுள்ளனர்.  மேலும் கணக்கெடுக்கப்பட்டவர்களில் 58% பேர் கணிசமான அளவு உதவி வழங்குவதாகக் கூறினர்.

ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை நடத்தப்பட்ட இவ் online வாக்கெடுப்பில் 514 முதுநிலை மாணவர்களும், 515 குழந்தைகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 

Related posts

East-end Toronto இல் நடந்த துப்பாக்கி சூட்டில் Pickering man ஒருவர் உயிரிழந்துள்ளார்

admin

Toronto வில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை;

Editor

Lebanon இல் வன்முறை அதிகரித்து வருவதால், கனேடியர்கள் விரைவில் வெளியேறுமாறு Ottawa அறிவுறுத்தல்

admin