Global Affairs Canada ஆனது Lebanon இல் இருந்து புறப்படும் மீதமுள்ள வணிக விமானங்களில் இருக்கைகளை முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளதுடன், கனேடியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு வலியுறுத்துகிறது.
பயணிகளே தங்களுடைய விமானங்களுக்கு பொறுப்பு, ஆனால் நிதி உதவி தேவைப்படுபவர்களுக்கு கடன்கள் உள்ளன என்று Joly குறிப்பிட்டார். இஸ்ரேலுக்கும் Hezbollah இற்கும் இடையே சண்டை அதிகரித்து வருவதால், Joly மற்றும் பாதுகாப்பு மந்திரி Bill Blair ஆகியோர் Lebanon இல் உள்ள கனேடியர்களை பல மாதங்களாக வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் இன்னும் ஏராளமான வணிக விமான விருப்பங்கள் உள்ளதாகவும், ஆனால் அவை வெள்ளிக்கிழமைக்குள் விரைவாக நிரப்பப்படுகின்றன என்றும் Blair கூறினார்.
Global Affairs Canada முடிந்தவரை பல கனடியர்களுக்கு உதவுவதற்காக இருக்கைகளை முன்பதிவு செய்யும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்த வார தொடக்கத்தில் 45,000 கனேடியர்கள் Lebanon இல் இருப்பதாக நம்பப்படுவதாக Joly கூறினார், ஆனால் பாதி பேர் மட்டுமே தூதரகத்தில் பதிவு செய்துள்ளனர். அத்தோடு Lebanon இல் உள்ள கனேடியர்கள் பற்றிய தகவலைப் பெறவும், கிடைக்கக்கூடிய இருக்கைகளில் ஒன்றைப் பாதுகாக்கவும் me-mo.sos@international.gc.ca என்ற மின்னஞ்சலைப் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
கனேடிய அரசாங்கமும் இராணுவமும் பல மாதங்களாக வெளியேற்றும் திட்டங்களில் வேலை செய்து வருகின்றன, ஆனால் அரசாங்கம் மக்களை வெளியேற்றுவதற்கு முன் அவர்களாகவே சுதந்திரமாக வெளியேறுமாறு வலியுறுத்துகிறது.
இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu ஐக்கிய நாடுகள் சபைக்கான பயணத்தை ரத்து செய்துவிட்டு, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நட்பு நாடுகளின் போர்நிறுத்தத்திற்கான அழைப்புகள் இருந்தபோதிலும் Hezbollah இற்கு எதிரான இஸ்ரேலின் பிரச்சாரம் தொடரும் என்று பொதுச் சபையில் உறுதியளித்த பின்னர் இஸ்ரேலுக்குத் திரும்பினார்.
G7 நாடுகள், Australia, Saudi Arabia, Qatar மற்றும் United Arab Emirates ஆகியவை இணைந்து இஸ்ரேல் மற்றும் Hezbollah விடம் இருந்து 21 நாள் போர்நிறுத்தத்தை கோரியுள்ளன.