கனடா செய்திகள்

Federal NDP அடிப்படை மளிகைப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த விரும்புகிறது

மத்திய அரசின் புதிய ஜனநாயகக் கட்சியினர் மளிகைக் கடையில் உள்ள பொருட்களுக்கு விலை வரம்பைக் கோருகின்றனர். Liberal அரசாங்கத்தால் மளிகை கடைக்காரர்களை நம்பவைக்க முடியாவிட்டால், விலைகளை தாங்களே குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக Liberals கனடாவில் உள்ள அனைவருக்குமான உணவு விலைகளைக் குறைக்கும் நெறிமுறையில் பெரிய மளிகைக்கடைக்காரர்களை கையெழுத்திட முயற்சித்து வருகின்றனர்.

பணவீக்கத்தின் சரிவு காரணமாக சில உணவுச் செலவுகள் சமீபத்தில் குறைந்துள்ளன, ஆனால் புதிய ஜனநாயகக் கட்சியினர் கடந்த மூன்று ஆண்டுகளில் விலை ஏறியதைப் போலக் குறையவில்லை என்று கூறுகிறார்கள். மளிகைக் கடைக்காரர்கள் பேராசை கொண்டவர்கள் என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

Conservatives முக்கிய Liberal சுற்றுச்சூழல் கொள்கையான கார்பனின் விலையை அகற்றுவதன் மூலம் மலிவு விலையை மேம்படுத்துவதற்கான அவர்களின் “axe the tax” அணுகுமுறையில் கவனம் செலுத்தியுள்ளனர்.

காலநிலை மாற்றம், பணவீக்கம், உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் போன்ற புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் கனடாவில் மளிகைக் கடைக்காரர்களிடையே போட்டியின்மை போன்ற காரணங்களால் 2021 முதல் உலகளவில் மளிகைப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இதன் அழுத்தத்தை உணர்ந்து, ஐரோப்பாவில் உள்ள சில அரசாங்கங்கள் staples மீதான விலைகளை கட்டுப்படுத்தியுள்ளன அல்லது செலவுகளைக் குறைக்க மளிகைக் கடைகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

மேலும் சமையல் எண்ணெய், சில பன்றி இறைச்சி வெட்டுக்கள், கோதுமை மாவு மற்றும் பால் போன்ற பொருட்களுக்கான விலைக் கட்டுப்பாடுகளை Hungary மற்றும் Croatia போன்ற நாடுகளும் கட்டாயப்படுத்தியுள்ளன. அத்தோடு Spain அத்தியாவசியப் பொருட்களின் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வரியை ரத்து செய்து சமையல் எண்ணெய் மற்றும் பாஸ்தா மீதான வரியை ஐந்து சதவீதமாக பாதியாகக் குறைத்தது.

மளிகைப் பொருட்களின் பணவீக்கம் கணிசமாக குறைந்திருந்தாலும், ஏப்ரல் மாதத்தில் வெறும் 1.4 சதவீதத்தை எட்டினாலும், கடந்த மூன்று ஆண்டுகளில் விலை 21.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

Related posts

ஜூன் மாதத்தில் மொத்த விற்பனை 0.6% குறைவு – Statistics Canada

admin

கடந்த ஆண்டை விட May மாதத்தில் வீட்டு விற்பனை குறைவடைந்துள்ளது – Canadian Real Estate Association

admin

Ontario இல் அதிகரித்து வரும் Mpox தொற்று நோய் – public health agency

admin