ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்ட கனேடிய இராணுவ வீரரான Lt.-Col. Kent Miller திங்கட்கிழமை Belgium இன் Casteau இல் பணியாற்றிய போது மருத்துவச் சிக்கல்களால் உயிரிழந்துள்ளார்.
Miller ஆயுதப்படையில் 24 வருட அனுபவமுள்ள பொறியியல் அதிகாரி என்று இராணுவம் கூறுகிறது. மேலும் அவர் உக்ரேனிய இராணுவம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு போர்க்கள தந்திரோபாயங்கள் மற்றும் மேம்பட்ட இராணுவ திறன்களில் பயிற்சி அளிக்கும் ஆயுதப்படை திட்டமான ஆபரேஷன் Unifier இன் கீழ் அவர் பணியாற்றுவதாக கூறப்படுகின்றது.
அவர் சமீபத்தில் Alberta இல் உள்ள 41 Combat Engineer Regiment இன் கட்டளை அதிகாரியாகவும், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புத் திறனில் பெல்ஜியத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது.