கனடா செய்திகள்

Waterloo பிராந்தியதிலுள்ள chop கடையொன்றில் GTA இலிருந்து திருடப்பட்ட $4M மதிப்புள்ள வாகனங்கள் மீட்பு

கடந்த மாதம் Waterloo பிராந்தியதிலுள்ள chop கடையொன்றில் சோதனையின் போது சுமார் 4 மில்லியன் டாலர் மதிப்புள்ள Greater Toronto Area (GTA) திருடப்பட்ட டஜன் கணக்கான வாகனங்கள் மீட்கப்பட்டன.

நவம்பர் 23 அன்று Township of North Dumfries இலுள்ள Darrell Drive இல் உள்ள ஒரு வணிகத்தில் காணப்பட்ட திருடப்பட்ட Toyota Tundra பற்றிய புகாரைப் பெற்றபோது இவ் விசாரணை தொடங்கியது. இதையடுத்து அதிகாரிகள் 2 பேரை கைது செய்தனர். மேலும் Waterloo Regional Police (WRP) அதிகாரிகள் பிரித்தெடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு மாநில வாகனங்களை கொண்ட chop shop ஒன்றையும் கண்டுபிடித்தனர்.

search warrant இனைத் தொடர்ந்து இரண்டு புதிய Lexus வாகனங்களுடன் Tundra மீட்கப்பட்டது. மேலும் கடையில் மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். Toyota Highlanders, Tundras, Lexus RX350s, Dodge Ram மற்றும் Ford F150s உள்ளிட்ட 52 உயர் ரக வாகனங்களை போலீசார் வெற்றிகரமாக மீட்டுள்ளனர். அவற்றில் பெரும்பாலானவை உதிரிபாகங்களுக்காக அகற்றப்பட்டதுடன், மூன்று மட்டும் அப்படியே இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். $80,000 மதிப்புள்ள கருவிகள் மற்றும் மூன்று forklifts உம் புலனாய்வாளர்கள் கைப்பற்றினர்.

73 மற்றும் 36 வயதுடைய Cambridge இனைச் சேர்ந்த இருவரும், 29 வயதுடைய North Dumfries Township இனைச் சேர்ந்த ஒருவரும் $5,000க்கு மேல் திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related posts

அதிகரித்து வரும் வன்முறையினால் Lebanon இல் இருந்து வெளியேறும் விமானங்களுக்கு கனடா இருக்கைகளை முன்பதிவு செய்து வருகின்றது

admin

மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற Joe Biden இன் அறிவிப்புக்கு Justin Trudeau பதிலளித்துள்ளார்

admin

Alta இன் Fort McMurray பகுதிகளில் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

admin