கனடா செய்திகள்

WestJet mechanics வேலைநிறுத்தத்தில் ஒப்பந்தம் எட்டப்பட்டது இருப்பினும் பயண இடையூறுகள் இன்னும் எதிர்பார்க்கப்படுகின்றன

WestJet நிர்வாகிகள் மற்றும் வேலைநிறுத்தம் செய்யும் mechanics களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கம் தாங்கள் இரண்டாவது தற்காலிக உடன்பாட்டை எட்டியதாக அறிவித்துள்ளனர். உறுப்பினர்களின் ஒற்றுமையின் நேரடி விளைவாக தற்போதைய வேலைவாய்ப்பு விதிமுறைகள் மற்றும் முதல் தற்காலிக ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட விதிமுறைகள் இரண்டிலும் கணிசமான முன்னேற்றங்களை வழங்கும் இரண்டாவது தற்காலிக ஒப்பந்தத்தை அடைய முடிந்தது எனவும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோர் உடனடியாக வேலைக்குத் திரும்ப வேண்டும் என்றும் Aircraft Mechanics Fraternal Association(AMFA) தெரிவித்தனர்.

இரண்டாவது கூட்டு ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்டால் WestJet சேமிப்புத் திட்டத்தில் இருந்து பணத்தை மாற்றாமல் உடனடியாக 15.5-சதவீத ஊதிய உயர்வை வழங்கும், ஐந்தாண்டு ஒப்பந்தத்தின் எஞ்சிய காலப்பகுதி முழுவதும் வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் கூடுதல் நேர ஊதியம் அதிகரிக்கும்.

WestJet தனது விமானங்கள் மீண்டும் சேவைக்கு கொண்டு வரப்படுவதால் இந்த வாரத்தில் விமானத்தில் இடையூறுகள் இருக்கும் என்று கூறியது. இருப்பினும் விமான நிறுவனம் பாதுகாப்பான மற்றும் சரியான நேரத்தில் செயல்பாடுகளை மீட்டெடுக்கும் பணியைத் தொடங்கும் எனவும் தெரிவித்தது.

வேலைநிறுத்தம் தொடங்கியதில் இருந்து கனடா முழுவதும் 13 விமான நிலையங்களில் 130 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக WestJet அதிகாரிகள் தெரிவித்தனர். வியாழன் முதல் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இறுதி நிலவரப்படி, 32 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளன. மேலும் 110,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

WestJet mechanics union வேலைநிறுத்தம் – ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் 82 விமானங்கள் ரத்து

admin

சீனாவுடன் வர்த்தகத்தை விரிவு படுத்த முனையும் கனடா.

canadanews

வியாழன் முதல் 4,100 Ontario convenience stores மது விற்பதற்கான உரிமம் பெற்றுள்ளன

admin