Liberal Party இன் தலைமைப் பதவிக்கான வேட்பாளர்களின் பட்டியல் தொடர்ந்து வளர்ந்து வருகின்றது. இந் நிலையில் Finance and Intergovernmental Affairs இன் அமைச்சரும், Beauséjour இன் MP யுமான Dominic LeBlanc அப் பதவிக்கு போட்டியிட போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட Donald Trump தொடர்ந்து வர்த்தகப் போரை தொடங்கி வரும் நிலையில், நிதியமைச்சர் என்ற தனது பணிக்கு தனது முழு கவனம் தேவை என்று LeBlanc கூறினார்.