கனடா-அமெரிக்க எல்லையில் RCMP பணியாளர்களின் எண்ணிக்கை மூன்று வாரங்களுக்கு முன்னர் இருந்ததை விட 35 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஆணையாளார் Mike Duheme தெரிவித்தார். கனடா எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தாவிட்டால் குறிப்பிடத்தக்க வரிகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump அச்சுறுத்தியதை தொடர்ந்து இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை அறிந்ததே.
CTV இன் Power Play நிகழ்சிக்கான நேர்காணலில், national police service ஏனைய இடங்களிலிருந்து வளங்களை தற்காலிகமாக நகர்த்துவதன் மூலம் எல்லையில் அதன் நிலையை அதிகரித்துள்ளதாக Duheme உறுதிப்படுத்தினார்.
திங்களன்று ஜனாதிபதி Trump மற்றும் பிரதமர் Trudeau இடையேயான தொலைபேசி உரையாடலில் Trudeau தனது அரசாங்கம் December இல் அறிவித்த $1.3 பில்லியன் எல்லைப் பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்துவதாக உறுதியளித்ததை தொடர்ந்து கனடாவுக்கு அந்தக் கட்டணங்களிலிருந்து 30 நாள் விலக்கு வழங்கப்பட்டது.
எல்லையிலுள்ள இந்த 10,000 பேர் தொகையானது Canada Border Services Agency மற்றும் RCMP பணியாளர்களின் கலவையாகும் என்பதை Duheme உறுதிப்படுத்தினார். இந்த முயற்சிக்கு மாகாணங்களும் உதவியிருந்ததாக ஆணையாளர் மேலும் கூறினார்.
இதனிடையே, RCMP ஆட்சேர்ப்பு மற்றும் பணியாளர் பற்றாக்குறையால் தொடர்ந்தும் சவால்களைச் சந்தித்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.