அடுத்த மாதம் நடைபெறவுள்ள தலைமைத்துவ மாநாட்டிற்கு முன்னதாக லிபரல் கட்சி இரண்டு விவாதங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்கள் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே எஞ்சியுள்ள நிலையில் Feb. 24 மற்றும் 25 ஆந் திகதிகளில் Montreal இல் பிரெஞ்சு மொழியில் ஒரு விவாதமும் ஆங்கில மொழியில் ஒரு விவாதமும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விவாதங்கள் குறித்த மேலதிக விபரங்கள் எவையும் அறிவிக்கப்படவில்லை.
March 09 வாக்கெடுப்புக்கு முன்னர் நடைபெறும் விவாதங்களில் தற்போதுள்ள ஐந்து வேட்பாளர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதுடன் முன்னாள் துணைப் பிரதமர் Chrystia Freeland நான்கு விவாதங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தலைமைப் போட்டியில் வாக்களிக்க கிட்டத்தட்ட 400,000 ஆதரவாளர்கள் உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளதாக கட்சி ஒரு வாரத்திற்கு முன்பு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.