October இல் கனடாவால் விதிக்கப்பட்ட மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக கனேடிய விவசாயப் பொருட்களை குறிவைத்து விதிக்கப்பட்ட சீனாவின் புதிய வரிகளால் வியாழக்கிழமை புதிய முனைகளில் அதிகரித்த வர்த்தகப் போருக்கு மத்தியில் கனடாவுக்கு மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை Bank of Canada ஆளுநர் Tiff Macklem ஒப்புக்கொண்டார்.
2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருந்ததாலும், வளர்ச்சி அதிகரித்து வந்ததாலும் கனேடிய பொருளாதாரம்
மீண்டுவரும் என்ற நம்பிக்கையைத் தூண்டியது என்றும் Macklem கூறினார்.
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா விதித்த கடுமையான வரிகளும் அதற்கு பதிலாக கனடா பில்லியன் கணக்கான டொலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு இறக்குமதி வரிகளை விதித்தமையும் காரணமாக கனேடியப் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்க நேர்ந்தது.
April 16 ஆந் திகதி Bank of Canada அதன் அடுத்த வட்டி விகித முடிவை எடுத்து பணவீக்கம் மற்றும் பொருளாதாரத்திற்கான முன்னறிவிப்புகளுடன் ஒரு புதிய பணவியல் கொள்கை அறிக்கையை வெளியிட உள்ளதாக ஆளுநர் Macklem தெரிவித்துள்ளார். கனடாவின் நிலமை வழமைக்கு திரும்பும் வரை இயல்பை விட குறைவாகவே முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் அவர் கூறினார்.
Ottawa வின் இரண்டு மாத GST தடையின் முடிவில் February இல் பணவீக்கம் 2.6 சதவீதமாக உயர்ந்ததாக Statistics Canada தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு Macklem இந்த கருத்துகள் வெளிவருகின்றது. 2027 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலேயே பணவீக்கத்திலிருந்து ஓரளவு முழுமையாக விடுபடலாம் எனவும் பொருட்களில் விலைவாசி உச்சத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றாலும் மீண்டுவர நீண்டகாலம் எடுக்கும் என கணிப்பிடப்படுகிறது.