கனடா செய்திகள்

கனடாவில் அடுத்த வாரம் முதல் Ozempic இன் எடை குறைப்பு மருந்துதான Wegovy கிடைக்கும்

திங்கள் கிழமை முதல் கனடாவில் உள்ள நோயாளிகளுக்கு தங்கள் எடை குறைப்பு மருந்தான Wegovy கிடைக்கப்பெறும் என Ozempic தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இவ் மருந்தானது கணிசமாக அதிக எடை கொண்ட நோயாளிகளுக்கும், உயர் இரத்த அழுத்தம், வகை 2 நீரிழிவு நோய் அல்லது தடையான தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற குறைந்தபட்சம் ஒரு மருத்துவ நிலையுடன் தொடர்புடைய நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படலாம்.

Wegovy உடல் செயல்பாடு மற்றும் ஊட்டச்சத்துடன் இணைந்து பயன்படுத்தப்பட வேண்டும் என கனடாவின் அறிவியல் இயக்குனரான சொக்கலிங்கம் கூறினார். ஒரு சதுர மீட்டருக்கு 30 kg அல்லது அதற்கு மேற்பட்ட BMI உள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இதை பரிந்துரைக்கலாம்.

மேலும் குறிப்பிட்ட அளவுகோல்களை சந்திக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே Wegovy வழங்கப்படுவதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts

2030 ஆம் ஆண்டிற்குள் கனடா 1.3 மில்லியன் கூடுதல் வீடுகளை கட்ட வேண்டும் – PBO அறிக்கை

admin

பிரதமர் Trudeau பதவி விலக வேண்டுமென Atlantic Liberal caucus தெரிவிப்பு

admin

Durham இல் இடைத்தேர்தல் – பிரதமர் வெளியிட்டுள்ள தகவல்!

Editor