April 2 ஆந் திகதி முதல் அமுலாகும் வகையில் அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்து automobile களுக்கும் 25 சதவீத வரிகளை விதித்து அமெரிக்க ஜனாதிபதி Donald Trump உத்தரவிட்டுள்ளார். இது வட அமெரிக்க தொழில்துறை மற்றும் கனேடிய auto sector என்பவற்றை பெருமளவில் பாதிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.
கனேடிய automobile துறை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருந்து எங்கள் தொழிலாளர்களைப் பாதுகாப்போம். எங்கள் நிறுவனங்கள் மற்றும் நாட்டைப் பாதுகாப்போம். நாங்கள் அதை ஒன்றாகப் பாதுகாப்போம் என பிரதமர் Mark Carney தெரிவித்துள்ளார். அத்துடன் 1965 ஆம் ஆண்டு கனடா, அமெரிக்கவிற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட automobile trade agreement இதன் மூலம் மீறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த வரி வதிப்பிற்குள் engines, transmissions, powertrain parts மற்றும் electrical components ஆகியவையும் அடங்கும் என Trump தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மிகப்பெரிய வாகனத்துறை உற்பத்தியாளர்களான
Ford, General Motors மற்றும் Tesla போன்றவை பாதிக்கப்பட்டு அதன் பங்குகளும் சரிந்தன.
இந்த வரிவிதிப்புக்கள் சந்தைகளில் குழப்பத்தை ஏற்படுத்துவதுடன் அவை எல்லையின் இருபுறமும் உள்ள தொழிலாளர்களையும் இடமாற்றுகின்றது. அடுத்தடுத்து கனடாமீது வரிகளை விதித்து வர்த்தகப் போரை தீவிரப்படுத்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி Trump இன் அடுத்த நான்கு வருடங்களும் எப்படி தொடரப்போகின்றது என்பது குறித்து அரசியல் தளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.