கனடா செய்திகள்

வரி விதிப்புகள் இல்லாவிட்டால் கனடாவின் பொருளாதாரம் முன்னேறும்

புதன்கிழமை வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் அறிக்கையின்படி அமெரிக்காவிலிருந்து வரும் கட்டணங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை இல்லாவிட்டால் இந்த மாத தொடக்கத்தில் வட்டி விகிதத் தளர்வை இடைநிறுத்தியிருக்கலாம் என்று Bank of Canada இன் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான அமெரிக்கா தனது நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்படும் கனேடியப் பொருட்கள் மீது முதல் சுற்று முழுமையான வரிகளை விதித்த ஒரு வாரத்திற்குப் பின்னரும் இரும்பு மற்றும் அலுமினிய இறக்குமதிகளை இலக்காகக் கொண்டு புதிய வரிகளை விதித்த அதே நாளிலும் இந்த வட்டி விகித முடிவு வந்தமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் புதிய வரிகளுக்கான கூடுதல் காலக்கெடு வரும் நாட்களில் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அமெரிக்க அதிபர் Donald Trump வாகன இறக்குமதிகள் மீதான வரிகளை பிற்பகுதியில் அறிவிப்பார் என்றும், ஏனைய நடவடிக்கைகள் April 02 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் கனேடிய பொருளாதாரம் எதிர்பார்ப்புகளை விட சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இது ஆறு தொடர்ச்சியான குறைப்புகளுக்குப் பின்னர் வட்டி விகிதத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான நிபந்தனைகளை வழங்கியிருக்கலாம் என்றும் Bank of Canada நிர்வாகக் குழு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் வர்த்தக பங்காளிகள் மீது புதிய வரிகள் அமுலுக்கு வரவுள்ள நாளான April 02 ஆந் திகதியை அமெரிக்க வர்த்தகத்திற்கான விடுதலை நாள் என Trump விபரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடாவில் பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்; பெல்ஜியம் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

admin

கனேடிய இளைஞர்கள் credit products இற்கான பணம் செலுத்துவதில்லை: Equifax

admin

உற்பத்தி விற்பனை அதிகரிப்பால் May மாதத்திற்கான மொத்த வர்த்தகம் வீழ்ச்சி – Statistics Canada

admin